கீழாநெல்லி – Phyllanthus Niruri – இத்தனை மருத்துவ குணங்களா?

கீழாநெல்லி – இத்தனை மருத்துவ குணங்களா?

 

கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும். மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற்றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.

கீழாநெல்லி கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும்  உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.

உட்கொள்ளும் முறை : முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும்.

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த கீழாநெல்லி கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.

 

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த மாற்று முறை :

கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள்  சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு  அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.

கீழாநெல்லி கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

 

மஞ்சள் காமாலை – ஆண்மை, தாது பலம் பெற :

தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள் கீழாநெல்லி கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும்.

கீழாநெல்லி கீரை பசியை நன்றாகத் தூண்டும்.

 

Phyllanthus niruri – Traditional medicine :

It is a widespread tropical plant commonly found in coastal areas, known by the common names gale of the wind, stonebreaker or seed-under-leaf. It is a relative of the spurges, belonging to the Phyllanthus genus of the family Phyllanthaceae.

Common names for Phyllanthus niruri include chanca piedra in Spanish, quebra pedra in Portuguese, bhumyamalaki in Ayurveda, sampa-sampalukan in Tagalog, and quebra-pedra in Portuguese. The herb is known as neala usiri  in Telugu, keezha nelli  in Tamil, nela nelli in Kannada, keezhar nelli  in Malayalam.

Phyllanthus niruri has been investigated for its potential medicinal benefits. It is effective at inhibiting kidney stone formation, but indicated “longer-term randomized clinical trials are necessary to confirm its therapeutic properties. Its benefits patients with chronic HBV (Hepatitis B Virus)(Jaundice)  infection.

About noblekannan 16 Articles
Chennai-India

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*