குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனையா??? வீட்டு வைத்தியம்-Cold and cough in Babies-Home remedies

குழந்தைகளுக்கு சளி, இருமல் :


குழந்தைகளுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை சளி, இருமல்.

மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம்.

மூச்சு விடவே குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

சாப்பிட முடியாமல், இரவு முழுவதும் தூங்க முடியாமல், அவதிப்படுவார்கள்.

சளித்தொல்லையால் அடிக்கடி வாந்தி வரும். காய்ச்சல்  வரும்.

குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுது கொண்டே இருப்பார்கள்.

சளி இல்லாமல் பார்த்துக்கொண்டாலே குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாய் வளர்வார்கள்.

 

சளித்தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். சளி பிடிக்கும் சமயங்களில்,  1/2 ஸ்பூன் அளவு அந்தப்பொடியை எடுத்து தேனில் குழைத்து கொடுத்து வந்தால் சளி நீங்கிவிடும்.

கருந்துளசி, குறுமிளகு இரண்டையும் சேர்த்து அரைத்து வடிகட்டி தேன் சேர்த்து,  2, 3 நாட்கள் கொடுத்து வந்தால் சளி நீங்கிவிடும்.

துளசி , தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி  இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். 1ஸ்பூன் அளவு எடுத்து தேனிலோ, வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் மார்பு சளி, இருமல் போன்றவை குணமாகும்.

குப்பைமேனி இலை அல்லது முருங்கைக் கீரையுடன் உப்பை சேர்த்து கசக்கி 1, 2 ஸ்பூன் அளவு கொடுத்தால் சளி வாந்தியாக வெளியே வந்துவிடும்.

இதுபோல கை வைத்திய முறைகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் பிரச்சனைகளை வீட்டிலேயே குணப்படுத்தலாம்.

 

சரி, இப்போது குழந்தைகளுக்கு சளி  பிடிக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் என பார்ப்போம்.

நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும்.

எளிதில் சீரணமாகும் உணவுகளைத் தர வேண்டும்.

பதப்படுத்தபட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் கண்டிப்பாகத் தரக்கூடாது.

பாலூட்டும் தாய் முதலில் தங்களுக்கு சளி பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாய் தலைக்கு குளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் தர வேண்டும்.

தாய் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தாலும், குழந்தைகளுக்கு வயிற்று  பிரச்சனைகள் உண்டாகும். எனவே தாய் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.

ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்ககூடாது.

படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும்.

மழை, பனிக்காலங்களில் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லக்கூடாது.  

தேவைப்பட்டால் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

ஈரக்காற்று படாத வகையில் குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடி பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

 

குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடங்களை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். 

இதையெல்லாம் கடைப்பிடிக்கும்போது, குழந்தைகளுக்கு சளி  பிடிக்காமல் வருமுன் காக்க முடியும்.

கடைப்பிடிப்போம்…

குழந்தைகள் நலன் காப்போம்….

About noblekannan 16 Articles
Chennai-India

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*