சளி, இருமல்

 

 

 

 

துளசிச் சாறு அல்லது தூதுவளைச் சாறை தினமும் குடித்து வந்தால் சளி, இருமல், நெஞ்சு சளி, மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் சரியாகும். மேலும் தினமும் இரண்டு, மூன்று  துளசி இலைகளை மெல்லலாம்.

 

 

 

இஞ்சிச் சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

 

 

 

 

உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.

 

 

 

 

 

ஒரு கைப்பிடி அருகம்புலை அரைத்துச் சாறு எடுத்துக் குடித்து வந்தால் சளித் தொல்லை இருக்காது.

 

 

 

 

 

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர தொடர் விக்கலையும் விரட்டிவிடலாம்.

 

 

 

 

கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும்.

 

 

 

 

சளி, மூச்சுத் திணறல் சீராவதற்கு ஒரு தக்காளியைச் சாறாக்கி, அதில் இரண்டு துளி தேன் கலந்து அருந்தலாம்.

 

 

 

 

சளி இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் மூலிகை டீ, தூதுவளை சூப்,  தூதுவளை  தோசை,  அடை, துளசி காபி, எள்ளு லட்டு, கொத்தமல்லி தோசை, முருங்கைக் கீரை அடை, முருங்கைக்காய் பொரியல், புதினா அவல் மிக்ஸ், பேரீட்சை ஜாம், வில்வ சூப் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் பெறலாம்.

 

 

 

 

 

பழுத்த நேந்திரம் பழத்தை இரவில் தினமும் பாதி அளவு சாப்பிட்டு வந்தால் மூச்சு சீராகும்.

 

 

 

 

சளி, கரகரப்பு, தொண்டைக்கட்டு நீங்க மா இலையைச் சுட்டு தேனில் வதக்கி சாப்பிட வேண்டும்.

 

  

 

 

 

பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கு இதமாக இருக்கும். குரல் வளம் பெருகும்.

 

      

 

 

 

இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

 

 

 

 

மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால், இருமல், காய்ச்சல் குணமாகும்.

 

 

 

 

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி, மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்கள் குறையும்.

583total visits,7visits today

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*