Fertility Boosting Foods to Improve Chances of Conceiving‎- சீக்கிரமாக கர்ப்பமாக உதவும் சிறந்த உணவுகள்-Natural ways to boost fertility and get pregnant faster

சீக்கிரமாக கர்ப்பமாக உதவும் சிறந்த உணவுகள்

அனைவருக்கும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடிய உணவுகளின் தெரிந்திருக்கும். 
ஆனால் கர்ப்பமாக முயலும்போது, சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கர்ப்பமாகலாம்.
பெரும்பாலானோருக்கு இந்த உணவுகளைப் பற்றி தெரிய வாய்ப்பிருக்காது. 
எனவே கருத்தரிக்க முயலும் போது சாப்பிட வேண்டிய சில உணவுகளை  அந்த காலத்தில் சாப்பிட்டு, 
உடலுறவில் ஈடுபட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.  

அதுமட்டுமல்லாமல்  இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, காபின், ஆல்கஹால், ஜங்க்  புட் 
முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால்  இவை கருமுட்டை வளர்ச்சியடைவதில் தடையை ஏற்படுத்தும். 


கர்ப்பமாக முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் :

கீரைகள் :

  

 



பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் 
ஃபோலேட் அதிகமாக இருப்பதால், 
இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், 
விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


பீன்ஸ் :








பீன்ஸில்  புரோட்டீன் அதிகமாக உள்ளது 

அது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரித்து, 

எளிதில் கர்ப்பமாக வழிவகுக்கும்.

எனவே இந்த உணவுப் பொருளை 

கர்ப்பமாக முயற்சிக்கும் போது, 
உணவில் அதிகம் சேர்த்து வரவேண்டும்.

 மீன் :


 






மீன்களில் கெளுத்தி, இறால், சால்மன் மற்றும் சூரை மீன்கள் 
போன்றவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
 
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால், 
அது ஆரோக்கியமான சிசுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


 முழு தானிய உணவுகள் :









முழு தானியங்களில் 
வைட்டமின்கள், 
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், 
இரும்புச்சத்து அதிகம் உள்ளன.

எனவே தினமும் முழு தானியங்களை

உணவில் சேர்த்து வந்தால், 
அது சீக்கிரம் கர்ப்பமாக உதவியாக இருக்கும்.
 
  
 கோதுமை பிரட் :


 
 





கோதுமை பிரட் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை 
சமநிலையில் வைக்கும். 
இதனால் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன்கள் 
சீராக செயல்பட்டு, எளிதில் கர்ப்பமாகலாம்.
 
எனவே கோதுமை பிரட்டை உணவில் சேர்த்து வாருங்கள்.


 
 ஆலிவ் ஆயில் :

   







ஆலிவ் ஆயிலில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. 
ஆகவே இதனை உணவில் சேர்க்கும் போது, 
இனப்பெருக்க உறுப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, 
கருவின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.
About noblekannan 16 Articles
Chennai-India

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*