மோர் (BUTTERMILK) – உணவே மருந்து

மோர்

மோர், வெய்யில் காலத்தில் வெப்பத்தைக் குறைக்கிறது.

உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

தயிரை விட மோர் சிறந்தது, எளிதில் ஜீரணமாகக் கூடியது.

உணவுக்குப்பின் ஒரு டம்ளர்  நீர்மோர் பருகினால் உண்ட உணவு சீக்கிரமாக சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.

பால், மோர், பழச்சாறுகள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நலம் பயக்கும்.


ஜீரண சக்தியை அதிகரிக்கும் மருந்தாகும் மோர் :

உணவுப்பாதையில் உள்ள புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. எனவே, சாப்பிட்ட பின் கடைசியில் மோர் சாதம் சாப்பிடுவது நல்லது.

உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோபயாடிக் மோரில் இருப்பதால், வெய்யில் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு, குடல் சார்ந்த பிரச்சனைகளை மோர் சரி செய்கிறது.

ஜீரணத்துக்கு உதவும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

மோர் குடித்தால் நல்ல  பசி எடுக்கும்.

பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர் உடலுக்கு மிகவும் அருமருந்தாகும்.

மோர் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. உடல் எடையைக் குறைக்கும்.

மூல நோய்க்கு மோர் நல்ல மருந்து.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இலைகளை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்தாகும்.

நீர்க்கடுப்பைப் போக்கும். உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் மோர் நல்ல மருந்து.

மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் பனை வெல்லம் கலந்து மோர் அருந்துவதால் மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். மாதவிடாய் காலங்களில் உண்டாகும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.

கால்சியம், பாஸ்பரஸ்  போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசை, நரம்புகளை வலுப்படுத்த மோர் உதவுகிறது.

தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்த பலனளிக்கும்.

வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.

வயிற்றுப்போக்கு ஆகும்போது ஒரு நாளைக்கு 4-5 முறை மோர் கொடுக்கலாம்.

அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், தோல் நோய்கள் விரைவில் குணமடையும்.

மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவர வாய்ப் புண், வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

ரத்தசோகையை சரி செய்ய மோர் நல்லது.

மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் சக்தி மோருக்கு உண்டு.

மெனோபாஸ் பருவத்தை எட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை அளிக்கிறது.

 

நீர் மோர் செய்முறை :

தேவையானவை :

தயிர் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
கறிவேப்பிலைபொடியாக நறுக்கியது
கொத்தமல்லித்தழைபொடியாக நறுக்கியது
இஞ்சிபொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய்தேவைக்கேற்ப
உப்புதேவையான அளவு
பெருங்காயம்சிறிதளவு
வெந்தயம்சிறிதளவு (விரும்புவர்கள் மட்டும்)

செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றி தண்ணீர் சேர்த்து மத்து கொண்டு அல்லது மிக்சியில் இட்டு, சிலுப்பி, கட்டிகள் இல்லாமல் செய்ய வேண்டும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரியும். அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்க வையான நீர்மோர் தயார்.

இத்தகைய மிகச்சிறந்த பயனளிக்கும், மிக எளிதில் செய்து தரக்கூடிய மோரை அனைவரும் பருகி பயன் பெற வேண்டும்.

About noblekannan 16 Articles
Chennai-India

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*